திருவள்ளூரில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-01-31 13:26:14



திருவள்ளூரில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூரில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் ஜன 31 : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி கழகத்தின் மாநில செயலாளர் ஆர்.கணேசன், அரசு அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் வி.வேல்முருகன், கோகுலகிருஷ்ணன், ஏ.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர்கள் நான்காம் பிரிவு சம்மேளனம் அகில இந்திய தலைவர் கே.கணேசன் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையினை மீண்டும் வழங்கிட வேண்டும். 7வது ஊதிய குழு நிர்ணயத்த 21 மாத நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து துறை அனைத்து பிரிவு காலிப்பணியிடங்களையும் நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி. ஊர் புற நூலகர்கள். பொது சுகாதாரத்துறை. காவல்துறை .உள்ளிட்ட அனைத்து துறையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், பண்ணை பணியாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவருக்கும் எதிர்கால வாழ்வாதாரம் கருதி பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தற்போது நடத்தியுள்ள போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செவி சாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களை அழைத்துப் பேச வேண்டும் . அதையும் மீறி தங்களை அழைத்துப் பேசாமல் கோரிக்கைகள் நிறைவேற்றாமல் இருக்கும் பட்சத்தில் வரும் 15-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதிலிருமிருந்து கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் சென்னையில் லட்சக்கணக்கில் ஒன்று திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும், அதற்கும் அரசு செவிசாய்க்காத பட்சத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலர்களும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஓட்டுநர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணி, மாவட்ட தலைவர் மனோகரன், மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயலாளர் வெங்கடாசலபதி, அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் செங்கை ரவி, செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்