ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்பாபாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் :

பதிவு:2024-01-31 13:28:14



ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்பாபாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் :

ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்பாபாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் :

திருவள்ளூர் ஜன 31 : ஜாக்டோ ஜியோ மாநில முடிவிற்கிணங்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.திவ்யா, பா.ராஜாஜி, வேல்முருகன், கணேசன், ரமேஷ்,. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகி மணிகண்டன் வரவேற்றார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் நிர்வாகிகள் ஞானசேகரன், பிரபாகரன், காத்தவராயன், பா.ஜவஹர், மோகன்தாஸ், கிருஷ்ணன், கண்ணதாசன், கார்த்திகேயன், காந்திமதிநாதன், முரளதிர், பன்னீர் செல்வம், லலிதா, தாஸ், பாண்டியன், முரளி, வெண்ணிலா, கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

இந்த போராட்டத்தின் போது 1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய. திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடை நிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலமையாசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருவள்ளூர் டிஎஸ்பி அனுமந்தன் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தாலுக்கா இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.