பதிவு:2024-01-31 13:32:15
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதநல்லிணக்க உறுதி மொழி ஏற்பு :
திருவள்ளூர் ஜன 31 : மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மதநல்லிணக்கம் மற்றும் தீண்டாமை ஒழித்து சமத்துவமாக இருக்க வலியுறுத்தியும் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு குறித்தும் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நாடு முழுவதும் ஜன.30 இல் மகாத்மா நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் அனைவரும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், தீண்டாமை சமத்துவம் கடைப்பிடிக்கவும் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்வில், அனைத்துத் துறைற அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, அதே வளாகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர். இதில் தொழு நோய் துறை துணை இயக்குநர் வசந்தி, மாவட்ட நலக் கல்வியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.