திருத்தணி அருகே கடத்தப்பட்ட கூலித்தொழிலாளியை 12 மணி நேரத்தில் அதிரடியாக மீட்ட திருத்தணி போலீசார் 2 பேர் கைது - 4 பேருக்கு வலை வீச்சு :

பதிவு:2024-02-03 09:01:47



திருத்தணி அருகே கடத்தப்பட்ட கூலித்தொழிலாளியை 12 மணி நேரத்தில் அதிரடியாக மீட்ட திருத்தணி போலீசார் 2 பேர் கைது - 4 பேருக்கு வலை வீச்சு :

திருத்தணி அருகே கடத்தப்பட்ட  கூலித்தொழிலாளியை 12 மணி நேரத்தில் அதிரடியாக மீட்ட திருத்தணி போலீசார் 2 பேர் கைது - 4 பேருக்கு வலை வீச்சு :

திருவள்ளூர் பிப் 01 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையா மகன் வெங்கடமுனி (42). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 30-ஆ்ம் தேதி காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை ஓட்டிச் சென்று தங்களுடைய விவசாய நிலத்தில் கட்டி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, நத்தம் கிராமத்தில் உள்ள கோவில் மண்டபம் அருகே இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் இருந்து இறங்கி வெங்கடமுனியிடம் கோவிலுக்கு செல்லும் வழி கேட்டுள்ளனர். வழி சொல்லிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் நான்கு பேரும் வெங்கடமுனியை கத்தி முனையில் காரில் கடத்தி சென்றுள்ளனர். மகனைக் கடத்துவதை கண்டு தாய் லட்சுமி கூச்சலிட்டு உள்ளார், அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து வெங்கடமுனியை காப்பாற்ற முயன்ற போது, மர்ம கும்பல் கத்தியால் வெட்ட முயற்சி செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பயந்து அலறியடித்து ஓடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார் வெங்கடமுனியை கடத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர் . போலீசார் விசாரணையில் திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வெங்கடமுனியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், பல முறை பணம் கேட்டும் வெங்கடமுனி தராததால் கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தியதும் தெரியவந்தது.

மேலும் ஆந்திர மாநிலத்தில் இவர்கள் பதுங்கியிருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்தில் இருந்த குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது , அங்கிருந்து தப்பித்து வேலூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.

அவர்களை தொடர்ந்து துரத்திய போலீசார் கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து, வெங்கடமுனியை மீட்டனர். மேலும் தப்பித்து ஓடிய நான்கு பேரைக் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து தொழிலாளியை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.