பதிவு:2024-02-03 13:07:03
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 22.07 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் : அமைச்சர்கள் திறந்து வைத்தனர் :
திருவள்ளூர் பிப் 03 : திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி துணை செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில்; பூவிருந்தவல்லி தொகுதியில் ரூ.2.50 கோடி மதி;ப்பீட்டில் பூவிருந்தவல்லி துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி விடுதி கட்டிடம், ஆவடி தொகுதியில் ரூ.22 இலட்சம் மதி;ப்பீட்டில் விளிஞ்சியம்பாக்கம் நகர்ப்புற பொது சுகாதார ஆய்வகம், கும்மிடிபூண்டி தொகுதியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் பாகல்மேடு துணை சுகாதார நிலையம், கும்மிடிபூண்டி தொகுதியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில், குருவாயில் துணை சுகாதார நிலையம், திருத்தணி தொகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் ஜோதி நகர் துணை சுகாதார நிலையம், திருத்தணி தொகுதியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் திருத்தணி அரசு மருத்துவமனை, இரத்த வங்கி கட்டிடம் என ரூ.3.77 கோடி செலவில் 6 புதிய மருத்துவ கட்டடங்களுக்கான கல்வெல்ட்டினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மேலும் பூவிருந்தவல்லி கந்தசாமி நகரில் ரூ.30 இலட்சம் மதி;ப்பீட்டில் நகர்புற துணை சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினர். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.17.77 கோடியில் மதிப்பீட்டியில் அறுவை சிகிச்சை அரங்கம், ரூ.52.93 இலட்சம் மகப்பேறு உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரிவு என மொத்தம் ரூ.18.30 கோடி மதிப்பீட்டியில் 2 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.அப்பொழுது அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்தாவது :
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்றைக்கு 8 புதிய அறுவை சிகிச்சை அரங்கங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த 8 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைப்பதற்கு ஏறத்தாழ ரூ. 17.77 கோடியே செலவிடப்பட்டிருக்கிறது. அதிநவீன வசதிகளின் கூடிய அருவை அரங்கங்கள் இன்றைக்கு ஆபரேஷன் தியேட்டர் காம்ப்ளக்ஸ் என்ற திட்டத்தின் வகையில் ஒரு பிரம்மாண்டமான கட்டமைப்பு ஒன்று நிறுவப்பட்டு தற்பொழுது பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த அறுவை சிகிச்சை அரங்கம் மக்களின் பயன்பாட்டிற்க்கு வந்திருக்கிறது. அதோடு மட்டுமல்லது மகப்பேறு உயர் சார்பு தீவிர சிகிச்சை ஒன்று 12 படுக்கைகளுடன் கூடிய உயர் சார்பு தீவிர சிகிச்சை தொகை ரூ.52.93 லட்சம், ஒட்டு மொத்தமாக 8 அறுவை சிகிச்சை அரங்கங்கள் மகப்பேறு உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரிவுக்கும் ரூ.18.30 கோடியே மதிப்பீட்டில் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),எஸ்.சந்திரன் (திருத்தணி), வி.ஜி.இராஜேந்திரன் (திருவள்ளூர்) மருத்துவம் மற்றும் ஊர நல பணிகள் துறை இயக்குநர் இளகோமகேஷ்வரன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜே.ரேவதி, துணை இயக்குநர் ஜவஹர்லால், துணை இயக்குநர் (பொ) பழனி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.