திருவள்ளூரில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி வாகனங்கள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :

பதிவு:2024-02-03 13:14:53

திருவள்ளூர் பிப் 03 : திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 15.01.2024 முதல் நடைபெற்று வருகிறது அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காவல் துறையினர் வாகன விற்பனையாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர், தன்னார்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகன பேரணி மற்றும் நான்கு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்து, தலைக்கவசம் அணிவது மற்றும் இருக்கை பட்டை அணிவதன் அவசியம் குறித்தும் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது பிறகு சாலை பாதுகாப்பு குறித்த கண்காணிச்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் தலைக்கவசம் அடங்கி தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள விளம்பர வாகனத்தில் திரையிடப்படும் சாலை பாதுகாப்பு குறித்த குறும்படத்தினை பார்வையிட்டார். இந்த விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முகப்பிலிருந்து புறப்பட்டு காமராஜர் சிலை வரை சென்றடைந்தது. இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனார்.

மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடமாடும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தையும் மற்றும் மாநகர போக்குவரத்து சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேருந்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.

இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சு.மோகன்,(திருவள்ளூர்) எம்.ஸ்ரீதரன், (பூந்தமல்லி) ஆர்.இளமுருகன் (ரெட்ஹில்ஸ்) மோட்டார்வாகன ஆய்வாளர்கள் கோ.மோகன், (திருவள்ளூர்) சி.காவேரி, (பூந்தமல்லி) எம்.கருப்பையா (செங்குன்றம்) எஸ்.இராஜராஜேஸ்வரி (திருத்தணி) மற்றும் திருவள்ளூர் நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.