பதிவு:2024-02-05 07:29:26
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு எம்எல்ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை :
திருவள்ளூர் பிப் 04 : பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகரில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை மற்றும் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அரிகிருஷ்ணன், மோ.ரமேஷ், கூளூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் நிர்வாகிகள் ஆர்டிஇ ஆதிசேஷன், பா.சிட்டிபாபு , நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், உதயமலர் பாண்டியன் நிர்வாகிகள் ராஜசேகர், பி.கே.நாகராஜ், கொப்பூர் திலீப்குமார்,சி.ஆர்.குமரன், நந்தகோபால், சி.சு.விஜயகுமார், கமலக்கண்ணன், டி.ஆர்.திலீபன், நகரமன்ற உறுப்பினர் செல்வகுமார், அயூப் அலி, வசந்தி வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.