பதிவு:2022-05-11 12:49:35
திருவள்ளூர் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் மே 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் பிரதிமாதம் ஒரு கிராமம் என நடத்தப்பட்டு வருகின்றது. வருகின்ற 14.05.2022 தேதி திருவள்ளூர் - சிறுகளத்தூர் நியாய விலைக்கடை அருகில்,ஊத்துக்கோட்டை - பென்னாலூர்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,பூந்தமல்லி - நேமம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், திருத்தணி - பெரியகடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,பள்ளிப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகம்,பொன்னேரி - கூடுவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,கும்மிடிப்பூண்டி- சுண்ணாம்புக்குளம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,ஆவடி - நெமிலிச்சேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,ஆர்.கே.பேட்டை - சமத்துவபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்திட தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மேற்படி அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.