பதிவு:2024-02-05 15:47:54
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீஞ்சூர் பகுதியில் பட்டா வழங்கும் சிறப்பு முகாமில் 2973 பட்டாக்கள் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 05 : முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023 ஜுன் மாதம் முதல் 2024 ஜுன் மாதம் வரை நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் (பொன்னேரி -கும்மிடிப்பூண்டி - ஊத்துக்கோட்டை தாலுக்கா) மீஞ்சூர் பகுதியில் எழில் திருமண மண்டபத்தில் பட்டா வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.
முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் .காந்தி தொடங்கி வைத்து பொன்னேரி வட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பட்டா 287 பயனாளிகளுக்கும், இலவச வீட்டு மனைப்பட்டா 53 பயனாளிகளுக்கும், பட்டாமாறுதல் (முழுபுலம்) 272 பயனாளிகளுக்கும், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பட்டா 731 பயனாளிகளுக்கும், இலவசவீட்டு மனைப்பட்டா 731 பயனாளிகளுக்கும் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்தில் இலவசவீட்டு மனைப்பட்டா 750 பயனாளிகளுக்கும் மொத்தம் 2973 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.அப்பொழுது மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பேசியதாவது :
திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று வட்டங்களான பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நம்முடைய மாவட்டத்தில் உள்ள எளிய மக்களுக்கு பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு நிலவரி பதிவு செய்தல் அவற்றின் பட்டா வழங்கக்கூடிய ஒரு முன்னோட்டத்தை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்படும்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த முதல் கோரிக்கையாக கும்முடிபூண்டி ரயில்வே நிலையம் மற்றும் நெடுஞ்சாலை துறையினுடைய அந்த நில எடுப்பு மக்களின் மறுகுடியமர்த்தல் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மாவட்ட நிர்வாகம் பணிகளை தொடங்கிடும். அதேபோல பொன்னேரி சட்டமன்றத்திற்கு குறிப்பிட்ட அதே கருத்திருக்கும் உரிய நடவடிக்க எடுக்கும்.இந்த நிகழ்ச்சியில் வந்திருக்கும் பயனாளி எல்லாருக்கும் அந்த பட்டா என்பது அவசியம் ஒன்று நமக்கு அந்த நிலம் சொந்தமானது என்பது மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு விஷயம் என்று கூறினார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி) துரை சந்திரசேகர் (பொன்னேரி) மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி,வட்டாச்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.