அங்கன்வாடி மையங்களுக்கான நிதி உதவியை மத்திய நிதி நிலை அறிக்கையில் குறைத்த மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை நகலையும் எரித்து அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-02-06 15:57:24

திருவள்ளூர் பிப் 06 : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கான நிதி உதவியை மத்திய நிதி நிலை அறிக்கையில் குறைத்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, பால், எரிவாயு காய்கறி, அரிசி உள்ளிட்ட மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியவாசிய பொருள்கள் விலை உயர்ந்து வரும் நிலையில், அங்கன் வாடிக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மத்திய அரசு 2023 - 2024 இல் ரூ.21521.13 கோடி ஒதுக்கியது. அண்மையில் 2024- 2025 நிதியாண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் ரூ.21200 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியமும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை நகலையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.