பதிவு:2024-02-06 15:59:30
திருவள்ளூா் ஶ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் தை மாத பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கருட சேவை :
திருவள்ளூர் பிப் 06 : 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூா் ஶ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் 4-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.அதன்படி முதல் நாளான இன்று 4-ஆம் தேதி விடியற்காலை கொடியேற்றமும், காலை தங்க சப்பரம் புறப்பாடும் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது .இதனைத் தொடர்ந்து நேற்று 2-ஆம் நாளான நேற்று காலை உற்சவா் ஹம்ச வாகன அலங்காரத்திலும், மாலை வீதி புறப்பாடும் இரவு சூரியபிரபை அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் அதிகாலையில் கருட சேவை மற்றும் கோபுர தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது உற்சவர் வீரராகவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் நான்கு மாட வீதியில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.