பூவிருந்தவல்லி பனிமலர் பொறியியல் கல்லூரி மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் பட்டா வழங்கும் சிறப்பு முகாம் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி 3,138 பட்டாக்களை வழங்கினார் :

பதிவு:2024-02-06 16:02:02

திருவள்ளூர் பிப் 06 : முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023 ஜுன் மாதம் முதல் 2024 ஜுன் மாதம் வரை நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் (பூவிருந்தவல்லி, ஆவடி, திருவள்ளூர், மதுரவாயல், தாலுகா) பூவிருந்தவல்லி பனிமலர் பொறியியல் கல்லூரி மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் பட்டா வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.

முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்து பூவிருந்தவல்லி வட்டத்தில் பட்டா மாறுதல் (முழுபுலம்) 80 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் (உட்பிரிவு) 120 பயனாளிகளுக்கும் மற்றும் ஆவடி வட்டத்தில் பட்டா மாறுதல் (முழுபுலம்) 50 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் (உட்பிரிவு) 250 பயனாளிகளுக்கும் மற்றும் திருவள்ளூர் வட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா 1038 பயனாளிகளுக்கும் ஆக மொத்த 1538 பயனாளிகளுக்கும்.திருவள்ளூர் வட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பட்டா 748 பயனாளிகளுக்கும், இலவச வீட்டு மனைப்பட்டா 852 பயனாளிகளுக்கும், மொத்தம் 1600 பட்டாக்களை வழங்கி பேசினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டா வழங்கப்பட உள்ளது. முதல் நாள் நிகழ்ச்சியின் சுமார் 3000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது இரண்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று 1500 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அனைத்து மக்களுக்கும் பட்டா கிடைக்க வேண்டும் என்று ஏழை எளிய மக்களுக்கு சொந்தமான வீட்டுமனை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீர்த்தப்பட்ட திட்டம். அனைத்து மக்களுக்கும் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்த முதலமைச்சருக்கு நன்றி என்று கூறினார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி) ,எஸ்.சந்திரன் (திருத்தணி), வி.ஜி.ராஜேந்திரன் (பூவிருந்தவல்லி), மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு, திருவள்ளூர் வருவாய் கோட்டாச்சியர் (பொ) ஐவண்ணன், பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார், மற்றும் அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.