கடம்பத்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் விபத்தில் மரணம் :

பதிவு:2024-02-07 13:20:37



கடம்பத்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் விபத்தில் மரணம் :

கடம்பத்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் விபத்தில் மரணம் :

திருவள்ளூர் பிப் 08 : கடம்பத்தூர் ஒன்றியம் கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் லாசர் மகன் பிரபாகரன் (38)கடம்பத்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான இவர் நேற்று தனது டிஎன் 20 சிடி 7989 என்ற என்ஃபீல்டு இரு சக்கர வாகனத்தில் மப்பேடு கிராமத்தில் இருந்து கொண்டஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது , மப்பேடு அருகே வளைவில் திரும்பும்போது எதிரே வந்த டிஎன் 20 ஏ எச் 9265 என்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர் .இந்த விபத்து குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.