பதிவு:2024-02-07 13:30:47
திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டையில் பட்டா வழங்கும் சிறப்பு முகாம் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடக்கி வைத்து 6267 பட்டாக்களை வழங்கினார்.:
திருவள்ளூர் பிப் 08 : முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023 ஜுன் மாதம் முதல் 2024 ஜுன் மாதம் வரை நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி திருத்தணி வட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பட்டா 523 பயனாளிகளுக்கும், இலவச வீட்டுமனைப் பட்டா 1627 பயனாளிகளுக்கும், நகர நில அளவை பட்டா 350 மொத்தம் 2500 பயனாளிகளுக்கும், பள்ளிப்பட்டு வட்டத்தில் 1907 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழாவை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்து, பட்டாக்களை வழங்கினார்.
இதில் பள்ளிப்பட்டு வட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பட்டா 175 பயனாளிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா 1732 பயனாளிகளுக்கும் ஆர்.கே.பேட்டையில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் 250 பயனாளிகளுக்கும் நத்தம் இணையவழி பட்டா (முழு புலம்) 1522 பயனாளிகளுக்கும் பட்டா மாறுதல் (முழு புலம்) ஆக மொத்தம் 1860 பட்டாக்கள் மற்றும் திருத்தணி வட்டத்தில் 2500 பட்டாக்கள், மற்றும் பள்ளிப்பட்டு வட்டத்தில் 1907 பட்டாக்கள் ஆர்.கே.பேட்டையில் 1860 பட்டாக்கள் ஆக மொத்தம் 6267 பயனானிகளுக்கு பட்டாகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமையில் வழங்கினார்.
விழாவில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார்,திருத்தணி வருவாய் கோட்டாச்சியர் தீபா, வட்டாட்சியர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.