பதிவு:2024-02-10 20:59:43
பட்டரைபெரும்புதூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சேர்ந்த 1016 பேருக்கு ரூ. 48.81 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகள் : அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 09 : திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கலையரங்க வளாகத்தில் மகளிர் குழுக்களுக்கான வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுகபுத்ரா வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் உதவிக்கான காசோலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது, தமிழகத்தில் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதோடு, மகளிர் வாழ்வு மேம்பாடு அடையும் நோக்கமாக கொண்டு மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவைகளும் இந்த நிகழ்ச்சி மூலம் வழங்கப்படுகிறது. அதோடு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 420 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 840 பேருக்கு ரூ.40.37 கோடியும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான பெருங்கடன் 9 குழுக்களைச் சேர்ந்த 18 பேருக்கு ரூ.6.83 கோடியும், சமுதாய முதலீட்டு நிதி ரூ.86 குழுக்களைச் சேர்ந்த 86 பேருக்கு ரூ.1.29 கோடி, சுழல் நிதியும், 39 பேருக்கு ரூ.6 லட்சமும், வட்டார வள மையக்கடன் 3 குழுக்களுக்கு ரூ.11 லட்சம் என மொத்தம் 1016 பேருக்கு ரூ.48.81 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன் (திருவள்ளூர்),எஸ்.சந்திரன் (திருத்தணி), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி துணைக்குழு தலைவர் தேசிங்கு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ச.செல்வராணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் விஜயகுமாரி சரவணன், சிவசங்கரி உதயகுமார், சரஸ்வதி சந்திரசேகர், வர்த்தக அணி அமைப்பாளர் வி.எஸ்.நேதாஜி, பட்டரை பாஸ்கர், ஒன்றியச்செயலாளர்கள் கொண்டஞ்சேரி ரமேஷ், திருவாலங்காடு மகாலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் காஞ்சிப்பாடி சரவணன் உள்பட பலர் கலந்து