பதிவு:2024-02-10 21:01:23
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் : கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு :
திருவள்ளூர் பிப் 09 : திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலை வகித்தார்.அப்பொழுது அமைச்சர் பேசியதாவது :
அந்தந்த மாவட்ட கவுன்சிலர் நம்ம பகுதியில் நமக்கு என்னென்ன தேவையோ நிஜமாக எந்தத் துறை இருந்தாலும் இந்த கமிட்டி மூலமாக நீங்க உங்க பகுதியில மக்களுக்கு என்ன தேவையோ திட்டங்கள் செய்து கொடுக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களுக்குத்தான் தெரியும் மக்களோட மக்களா இருக்காங்க மக்களோட கஷ்ட நஷ்டங்கள் அவங்களுக்கு தான் சொல்லுவாங்க அந்தப் பகுதியில் அவங்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்று உங்ககிட்ட தான் சொல்லுவாங்க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும்.
இந்த கூட்டமானது அனைத்து துறைக்கும் பொதுவாக இருக்கும். திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் அதை மாவட்ட ஆட்சியர் பரிசளிப்பார். இந்த கூட்டத்தின் மூலம் யாரா இருந்தாலும் உங்கள் கோரிக்கையை அனைவரும் மனுவாகக் கொடுங்கள் நாங்கள் அதை பரிசளிக்கிறோம். இதை நாங்கள் பொறுப்போடு செயலாற்றுவோம் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,இங்கு பல்வேறு திட்டங்கள் உடைய நிலை குறித்து அவை எந்த அளவுக்கு மக்களின் நலனை தேடி காப்பாற்றி இருக்கும் குறித்தும் ஆய்வு செய்வதற்கும் அதை தாண்டி அவற்றில் உள்ள குறைகளை கலைத்து அவற்றை எப்படி சிறப்பாக செய்வது என்பதற்கு இந்த மாவட்ட அளவிலான குழு கூட்டத்தின் உடைய நோக்கம் முக்கியமானது என்று கூறினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங் மற்றும் திட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.