திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ரூ.7.50 கோடியில் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையி்ல் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார் :

பதிவு:2024-02-10 21:06:25



திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ரூ.7.50 கோடியில் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையி்ல் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ரூ.7.50 கோடியில் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்  தலைமையி்ல் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் பிப் 10 : திருவள்ளூர் நகராட்சி சார்பில் ராஜாஜிசாலையில் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். திருவள்ளூர் நகரின் முக்கியப் பகுதியில் உள்ள இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போதிய இட வசதி இல்லாமல் மாணவ மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் கூடுதல் வகுப்பறை கட்டவோ, அல்லது மாற்று இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி,திருவள்ளூர் நகராட்சி சார்பில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 51 சென்ட் நிலத்தை மீட்கக் கோரி திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் நகரமன்றக் கூட்டத்தில் நகராட்சி பள்ளிக் கட்டிடம் கட்ட ஏதுவாக மீட்கப்பட்ட 51 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை நகராட்சிக்கு தானமாக வழங்க வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மீட்கப்பட்ட இடத்தில் திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி புஜைக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், நகரமன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் பூமி பூஜை போட்டு முதல் செங்கல்லை எடுத்து கொடுத்து கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். நகராட்சி மேல்நிலைப் பள்ளியாக செயல்பட இருப்பதால் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 3 அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் 500 முதல் 600 மாணவர்கள் வரை படிக்க இருப்பதால் அவர்களுக்கு தேவையான கழிவறை, லேப், குடிநீர் வசதி உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.

மேலும் நகராட்சி கல்வி நிதி ரு.70 லட்சத்தில் அடுத்த கட்ட பணி மேற்கொள்ள இருக்கிறோம். மீதமுள்ள தொகைக்கு அரசிடம் விண்ணப்பித்து விரைவில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. எனவே விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி முடிக்கப்படும் என எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார்.