மேல்நல்லாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்டாஜோன் மாத்திரைகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழங்கினார் :

பதிவு:2024-02-10 21:09:34



மேல்நல்லாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்டாஜோன் மாத்திரைகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழங்கினார் :

மேல்நல்லாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்டாஜோன் மாத்திரைகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழங்கினார் :

திருவள்ளூர் பிப் 10 : திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்டாஜோன் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள் மாணவ மாணவிகளோடு அமர்ந்து வழங்கி பேசினார்.

அப்போது, நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு ஆண்டுதோறும் 9-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஒவ்வொரு குழந்தையும் புழுக்கள் இல்லாததாக மாற்றும் முயற்சியாகும். இத்திட்டம் கடந்த 2015 முதல் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

20 வயது முதல் 30 வயதுடைய பெண்கள் ,கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர, அனைவருக்கும் அங்கன்வாடி மையம் மூலம் வழங்கப்படும். இதில் 1 முதல் 2 வயதுக்குள்பட்டவர்களுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரை, 2 முதல் 19 வயதுவரையில் 1 மாத்திரை, 20 முதல் 30 வயதுவரை உள்ள பெண்களுக்கு கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர ஒரு மாத்திரையும் என குழந்தைகள் 7 லட்சத்து75 ஆயிரத்து 834, பெண்கள் 2 லட்சத்து 67 ஆயிரத்து 105 என 10 லட்சத்து 42 ஆயிரத்து 939 பேருக்கு வழங்கப்பட உள்ளன.

இந்த குடற்புழு நாளில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 16-ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளன. அதனால் அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரையை உள்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

இதில் சுகாதாரத்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) சேகர், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜவஹர்லால், வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், ஊராட்சி தலைவர் ஹரிபாபு, சுகாதாரத்துறை அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.