திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் :

பதிவு:2024-02-13 18:11:16



திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் :

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் :

திருவள்ளூர் பிப் 13 : திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத்தேர்வு தொடங்கியது. தொடர்ந்து 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்2, பிளஸ்1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-இல் தொடங்கி, தொடர்ந்து ஏப்.8 வரையில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக் கட்டப்பணிகளில் பள்ளிக் கல்வித்துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்காக அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுக்கான ஆய்வக பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயார் செய்து வரும் 19-ஆம் தேதி வரையில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி, திருத்தணி கல்வி மாவட்டங்களில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறைத்தேர்வு நடைபெற்றது. இதில் திருவள்ளூர் அருகே மணவாளநகர் கே.இ.நடேச செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் பாடப்பிரிவுக்கான செய்முறைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.ஞானசேகரன், புறத்தேர்வாளர் பீட்டர் ராக்லன்ட், அகதேர்வாளர் டி.கல்பனா, ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இத்தேர்வு வரும் 19-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.