கண்ணப்பாளையம் ஊராட்சியில் வீட்டுமனை வழங்கக் கோரி கலெக்டரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை மனு :

பதிவு:2024-02-13 18:12:51

கண்ணப்பாளையம் ஊராட்சியில் வீட்டுமனை வழங்கக் கோரி கலெக்டரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை மனு :

கண்ணப்பாளையம் ஊராட்சியில் வீட்டுமனை  வழங்கக் கோரி கலெக்டரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை மனு :

திருவள்ளூர் பிப் 13 : பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சியில் 40 ஆண்டுகாலமாக வீடு, வீட்டுமனை இல்லாமல் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அனைத்து ஆவணங்களும் உள்ளன. 40 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி முதலமைச்சர், எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர், ஒன்றிய பெருந்தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே கண்ணப்பாளையம் ஊராட்சியில் தரிசு சர்வே எண் 307-ல் ஒரு குடும்பத்திற்கு 2 சென்ட் வீதம் வழங்கினால் வீடு கட்டி வாழ ஏதுவாக இருக்கும். எனவே தங்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் ஆதிகேசவன் கொடுத்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.