பதிவு:2022-05-13 13:34:09
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் :
திருவள்ளூர் மே 12 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சந்தோஷ் மேரி தலைமை தாங்கினார். மாநில தலைமை நிலைய செயலாளர் கோ.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமி ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்,அங்கன்வாடி பணியாளர்களை உடனடியாக நிரந்தர படுத்திட வேண்டும்,தூய்மைப் பணியாளர்களை தொகுப்பூதிய மற்றும் மதிப்பூதியத்தில் இணைத்திட வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்பொழுது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாய் சொல்லில் வீரராக உள்ளதாகவும், சொல்வது எதையும் அவர் செயலில் இல்லை என குற்றம் சாட்டிய அரசு பணியாளர்கள்,கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்தனர்.இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பிரபாகரன்,மாவட்ட செயலாளர் எம்.சுகுமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.