தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் 25 ம் நாள் நிகழ்ச்சியாக வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் : மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் பங்கேற்பு :

பதிவு:2024-02-13 18:51:24

திருவள்ளூர் பிப் 13 : திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடந்த ஜனவரி 15 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூர் வட்டாரத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் மற்றும் எதிர் திசையில் வாகனம் ஓட்டுவதை தவிரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தணிக்கை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வானகரம் சுங்கச்சாவடி வழியாக செல்லும் களைப்படைந்த வாகன ஓட்டுனர்களுக்கு தேனீர் வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி 25 ம் நாள் நிகழ்ச்சியாக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப் பெருமாள் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்

இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஓட்டுநர்களுக்கும் பொதுமக்களுக்கும் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார். மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்கிய மாநகர போக்குவரத்து ஒட்டுநர்கள் மற்றும் தனியார் பள்ளி ஓட்டுனர்களுக்கு நற்சான்றுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சு.மோகன், மோட்டார் வாகன ஆய்வாளர் கோ.மோகன் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், தன்னார்வலர்கள், வாகன விற்பனையாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.