பதிவு:2024-02-13 18:54:01
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 331 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில்இ நிலம் சம்பந்தமாக 76 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 54 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 63 மனுக்களும் பசுமை வீடு,அடிப்படை வசதிகள் வேண்டி 67 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 71 மனுக்களும் என மொத்தம் 331 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
அதனை தோடர்ந்து தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற , பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் விபத்து மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5.00,000-ஐ பயனாளி இறந்தவரின் நியமனதாரர் (மனைவி) ஆ.வசந்தி மற்றும் வாரிசுதாரர்களான ஆ.தனஞ்செழியன் (மகன்-மைனர்) மற்றும் ஆ.பிரபஞ்செழியன் (மகன்-மைனர்) ஆகியோர்களுக்கு அதற்கான ஆணையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆணை வழங்கினார்.
பின்பு திருவள்ளுர் மாவட்டம்,ஆவடி வட்டம்,பட்டாபிராம் பகுதியில் வசித்து வரும் ஆரோக்கிய மைக்கேல் ராய்ஸ் என்பவர் மத்திய பிரேதசம் மாநிலத்தில் நடைபெறும் இரண்டாவது தேசிய தர பாரா மேசை பந்து சாம்பியன் போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.30.000. க்கான காசோலையும், திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி வட்டம், சிவாடா கிராமத்தில் வசித்து வரும் சுனிதா என்பவர் மிக்ஜாம்த புயலால் தனது வீடும், தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் தொழில் செய்ய உதவி தொகை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.25000 க்கான காசோலையும் ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர், (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், சமுக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் வி.கணேசன்,தொழிலாளர் உதவி ஆணையர் பொன்னெரி மு.வரதராஜன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பல்வேறு சார்ந்த உயர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.