பதிவு:2024-02-13 18:55:47
திருவள்ளூர் மாவட்டத்தில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காசோலை, பாராட்டுச் சான்றிதழ்கள் : மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 13 : திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு 09.01.2024அன்று திருவள்ளூர், தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேனிலைப் பள்ளியிலும் கல்லூரி மாணவர்களுக்கு 10.01.2024 அன்று திருநின்றவூர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.10000 தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவலக் கண்ணன் செட்டி இந்து மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த பா. ஸ்ரீநிதி, இரண்டாம் பரிசுத்தொகை ரூ.7000 திருவள்ளூர், க.மு.ந. சகோதரர்கள் நகராட்சி மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த செ. கீர்த்திகா, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.5000 கே.ஜி. கண்டிகை, அரசினர் மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த ரா.ச. செந்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளனர்.
கட்டுரைப் போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.10000 கே.ஜி. கண்டிகை, அரசு மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த கோ. சத்யா, இரண்டாம் பரிசுத்தொகை ரூ.7000 திருவள்ளூர், தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவலக் கண்ணன் செட்டி இந்து மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த அ.ர. ஹரிப்ரியா, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.5000 திருவள்ளூர், தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவலக் கண்ணன் செட்டி இந்து மெட்ரிக் மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த செல்வி மா. நளினி பெற்றுள்ளனர். பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.10000 திருவள்ளூர், நகராட்சி மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த சி. சந்தோஷ், இரண்டாம் பரிசுத்தொகை ரூ.7000 திருவள்ளூர், க.மு.ந. சகோதரர்கள் நகராட்சி மேனிலை பள்ளியைச் சேர்ந்த நே. சிவசங்கர், மூன்றாம் பரிசுத்தொகை ரூ.5000 ஆவடி, விஜயந்தா நன்மாதிரி மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த கோ. ராம்குமார் பெற்றனர்.
இதேபோல், கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.10000 நசரத்பேட்டை, பூவிருந்தவல்லி, எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த த. நரேந்தர், இரண்டாம் பரிசுத்தொகை ரூ.7000 நூம்பல், சிந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பி. பிரியதர்ஷினி, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.5000 ஆவடி, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரியைச் சேர்ந்த ரா. தேவயானி பெற்றுள்ளனர். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.10000 திருத்தணி, தளபதி கே. விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மா. ஹரிணி, இரண்டாம் பரிசுத்தொகை ரூ.7000 வானகரம், அப்போலோ செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த ஹ. ஸ்ரீஹரிணி, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.5000 மதனங்குப்பம், சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த இர. லோகேஷ்வரி. பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.10000 திருநின்றவூர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த செ. சிவன், இரண்டாம் பரிசுத்தொகை ரூ.7000 பொன்னேரி, உலகநாத நாராயணசுவாமி கலைக் கல்லூரியைச் சேர்ந்த மு. தாமரைச்செல்வி, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.5000 திருநின்றவூர், ஜெயா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூ. சந்தோஷ் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தனது இருக்கையில் அமரவைத்து பேசவும் கவிதை வாசிக்கவும் செய்து அழகு பார்த்தார். பின்னர் அவர்களுக்கு பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.
இதில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இரா.அன்பரசி மற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.