பதிவு:2024-02-14 17:59:48
திருவள்ளூர் ஊர்க்காவல் படை வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி பதவிகளுக்கு ஆள் தேர்வு : எஸ்.பி., சு.சீனிவாச பெருமாள் தகவல் :
திருவள்ளூர் பிப் 14 : மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படையில், வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி பதவிகள் காலியாக உள்ளது. மேற்காணும் பதவிகளுக்கு ஆள் தேர்வு நடைபெற உள்ளது.
விருப்பம் உள்ள தனியார் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட, ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு:- 20 முதல் 45 வரையிலான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பொதுநல சேவை, தன்னார்வ தொண்டில் ஆர்வம் உள்ளோர், விண்ணப்பத்தை வரும் 29.02.2024-ம் தேதிக்குள், பிறப்பு சான்று, ஆதார், கல்வி தகுதி, உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ், தற்போதைய பாஸ்போர்ட் புகைப்படத்துடன், எஸ்.பி., அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு, திருவள்ளூர் எஸ்.பி., சு.சீனிவாச பெருமாள் கேட்டுக் கொண்டுள்ளார்.