திருவள்ளூர் அருகே ஒடும் அரசு பேருந்தில் வலிப்பு ஏற்பட்டதால் ஓட்டுநர் உயிரிழப்பு :

பதிவு:2024-02-14 18:03:17



திருவள்ளூர் அருகே ஒடும் அரசு பேருந்தில் வலிப்பு ஏற்பட்டதால் ஓட்டுநர் உயிரிழப்பு :

திருவள்ளூர் அருகே ஒடும் அரசு பேருந்தில் வலிப்பு ஏற்பட்டதால் ஓட்டுநர் உயிரிழப்பு :

திருவள்ளூர் பிப் 14 : திருவள்ளூர் அருகே ஓடும் அரசு பேருந்தில் திடீர் வலிப்பு ஏற்பட்டதை அறிந்து பேருந்தை ஒரம் கட்டி நிறுத்திய நிலையில் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒட்டுநர் உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகே புஜ்ஜிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமநாதன். இவர் திருவள்ளூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து பென்னானூர்பேட்டை நோக்கி அரசு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது, வெள்ளாத்துக்கோட்டை நோக்கிச் அருகே போது திடீரென வலிப்பு வந்ததால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பேருந்தை சாலை ஓரம் நிறுத்தியுள்ளார். பின்னர் வலிப்பு அதிகமாகவே 108 அவசர வாகனம் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓட்டுனர் ஹேமநாதன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பென்னலூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இவர் ஏற்கனவே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள மருத்துவர்கள் சார்பில் அறிவுரை வழங்கியுள்ளனர்.அதனை பின்பற்றாமல் ஓட்டுநர் பணியை அளித்த காரணத்தால் உயிரிழந்துள்ளதாக சக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.