பதிவு:2024-02-14 18:07:29
திருவள்ளூரில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல்:
திருவள்ளூர் பிப் 14 : திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் வருகின்ற 15.02.2024 அன்று மாலை 5 மணிக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி, வேளாண்மை கல்லூரி,நர்சிங் கல்லூரி மாணவர்கள் வங்கிக்கடன் விண்ணப்பிக்க சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்க உள்ளன .மேலும் கல்விக்கடன் தொடர்பான வங்கிகளின் சிறப்பு அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது.
மேலும் வருவாய்த்துறை மற்றும் இ-சேவை மையம் மூலம் கடன் நடை முறைக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதற்கு வசதிகள் இம்முகாமில் செய்யப்படவுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் விண்ணப்பித்த கல்வி கடன் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.