பதிவு:2022-05-13 13:37:06
இராமசமுத்திரம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் மே 12 : திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமசமுத்திரம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் 2010-2011-ம் ஆண்டில் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள் தற்போது 2021-2022-ம் ஆண்டில் சிரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்படி சமத்துவபுரத்தில் சீரமைக்கப்பட உள்ள 100 வீடுகளுக்கு கீழ்காணும் நிபந்தனைகளின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நலிவடைந்த குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற துணைப்படை உறுப்பினர்கள், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குடும்பங்கள் ( ICDS துறையால் அடையாளம் காணப்பட்டவர்கள்) திருநங்கைகள்,HIV AIDS,TB நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், சம்பந்தப்பட்ட துணை இயக்குநரால் (சுகாதார துறை) சான்றளிக்கப்பட்டவர்கள், குடும்பத்தில் மன வளர்ச்சி குன்றிய நபர்கள் மற்றும் தீ, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், புதுப்பிக்கப்பட்ட PIP தரவுகளிலிருந்து ஏழை குடும்பங்கள் ஆகிய பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவார்கள்.
நிபந்தனைகளில் உள்ள குடும்பங்கள் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்ந்த இராமசமுத்திரம் ஊராட்சி, சமத்துவரபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.இதற்கான 19.05.2022 தேதி வரை மாலை 5.45 மணி வரை அலுவலக வேலை நேரத்தில்,அலுவலக வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.