பதிவு:2024-02-14 18:10:19
திருவள்ளூர் அருகே 34 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் பெயரில் போலி ஆவணம் மூலம் 64 சென்ட் நிலம் பதிவு செய்துள்ளதை மீட்டுத் தரக்கோரி எஸ்.பி அலுவலகத்தில் புகார் :
திருவள்ளூர் பிப் 14 : திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமம் பண்டார தெருவில் வசித்து வருபவர் குமுதம். இவரது கணவர் கடந்த 1989-ல் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பெயரில் இருந்த 64 சென்ட் நிலத்தில் பூர்வீகமாக விவசாயம் செய்து வந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வானம் பார்த்த பூமியான 64 சென்ட் நிலத்தில் அறுவடை செய்து நிலையில் தற்போது அந்த நிலத்தில் பயிர் வைக்க நிலத்தை உழ சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், இது தன்னுடைய நிலம், தனது பெயர் உள்ளது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் மூதாட்டி குமுதம் மற்றும் அவரது மகன்கள் புகார் அளித்தும் இது வரை சுப்பிரமணி என்பவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மாவட்ட காவல் கண்காணிர் அலுவலகத்தில் தாய் மற்றும் இரண்டு மகன்கள் புகார் அளித்துள்ளனர். தனது தந்தை உயிரிழந்து 34 ஆண்டுகள் ஆன நிலையில் தனது தந்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கடந்த ஆண்டு போலியான ஆவணம் தயாரித்து போலியான நபரை வைத்து இறந்தவரின் பெயரில் இருந்த நிலம் விற்பனை செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே தனது தந்தை பெயரில் இருந்த 64 சென்ட் நிலத்தை வைத்து தனது தாய் பிழைப்பை நடத்தி வருவதாகவும். போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்ததால் தனது தாயின் வயதான காலத்தில் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால் நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து சென்றனர்.