பதிவு:2024-02-14 18:14:31
அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வீடு கட்டிக் கொள்ள ரூ. 2 இலட்சம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 14 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், மோரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டேனியா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய்குணமாகாமல் இருந்ததால் சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து முதலமைச்சர் அறிந்தவுடன், சிறுமிடேனியாவிற்கு அறுவைசிகிச்வை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் 29.08.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவைசிகிச்சை மேற்கொண்ட சிறுமிடேனியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள் 08.02.2023 அன்று இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமிடேனியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து 30.06.2023 அன்று அவர்களின் குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், எண் 66, பாக்கம் கிராமத்தில் ரூ.1.48 இலட்சம் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடுவசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் மதிப்புள்ள வீடுகட்டிக்கொள்ள அனுமதி ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
இதனை தொடந்து,பிரதமமந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ்பயனாளிகள் தாங்களாக வீடு கட்டி கொள்ளும் திட்டத்தின் படி அரசு மானியம் 2,10,000 போக வீடு கட்டிக் கொள்ள பயனாளரால் செலுத்தப்பட வேண்டிய தொகை ரூ.2,00,000 திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.