பதிவு:2024-02-16 13:32:11
திருவள்ளூர் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் வீடுகளுக்கு பங்கு தொகை செலுத்த வட்டியில்லா வங்கிகடன் பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் பிப் 16 : திருவள்ளூர் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் வீடுகளுக்கு பங்கு தொகை செலுத்த வட்டியில்லா வங்கிகடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஓதுக்கப்பட்டும் வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்கு தொகைக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் நபர் ஓருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை பெறப்படும் கடன் தொகைக்கு 5 ஆண்டுகளுக்கு மட்டும் வட்டியில்லா கடன் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் அரசால் ஒதுக்கப்பட்ட வீட்டிற்க்கான ஆணைநகல், மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகிளைகளை அணுகலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.