திருவள்ளூரில் கல்விக்கடன் வழிகாட்டும் நாளில் 472 மாணவர்களுக்கு ரூ. 51.38 கோடி கல்வி கடன் ஆணைகள் : கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார் :

பதிவு:2024-02-16 13:37:17



திருவள்ளூரில் கல்விக்கடன் வழிகாட்டும் நாளில் 472 மாணவர்களுக்கு ரூ. 51.38 கோடி கல்வி கடன் ஆணைகள் : கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார் :

திருவள்ளூரில் கல்விக்கடன் வழிகாட்டும் நாளில் 472 மாணவர்களுக்கு ரூ. 51.38 கோடி கல்வி கடன் ஆணைகள் : கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார் :

திருவள்ளூர் பிப் 16 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் (2022-23) மட்டும் மாணவர்களுக்கு கல்வி கடனாக ரூ.145.00 கோடி வழங்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்திலே கல்வி கடனாக சென்னை, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.145.00 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டு மாநிலத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.இந்த 2023-24 நிதி ஆண்டில் கல்வி கடனாக ஏப்ரல் 2023 முதல் டிசம்பர் 2023 வரை கல்வி கடனாக 4,273 மாணவர்களுக்கு ரூ.108.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகளுக்கு 1,975 பேருக்கும் ரூ.45.64 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் கொண்டாட மாவட்டம் தோறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.

இவ்விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும், கல்விக்கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்குவதற்கும், அதிகரிப்பதற்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பாக பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு அரங்குகள் அமைத்து மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டது.

இவ்விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு வித்யாலக்ஷ்மி போர்டல், இணையதளம் மூலம் கல்வி கடன் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் ஆணைகளை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜ்குமார், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), பூவிருந்தவல்லி இந்தியன் வங்கி மண்டல அலுவலக துணை பொது மேலாளர் மண்டல மேலாளர் சுசிலா பார்த்தசாரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.