திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் : மாவட்ட செயலாளர் பங்கேற்பு :

பதிவு:2024-02-16 13:39:06



திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் : மாவட்ட செயலாளர் பங்கேற்பு :

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் : மாவட்ட செயலாளர் பங்கேற்பு :

திருவள்ளூர் பிப் 16 : திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் காக்களூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் மா.ராஜி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜே.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் சீனிவாசன், ச.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பா.நரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆதிஷேசன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

இதில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள், ஆவடி மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குறித்தும், உரிமைகள் மீட்க ஸ்டாலின் குரல் என்ற பரப்புரைக் கூட்டம் குறித்தும் திமுக தலைவரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற 27-ஆம் தேதி கனிமொழி எம்பி திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் தொழிற்சாலை நிர்வாகத்தினர், சங்கத்தினர், பல்வேறு அமைப்பினரிம் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதால் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தினர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் சன்.பிரகாஷ், புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், டி.தேசிங்கு, என்.இ.கே.மூர்த்தி, பேபிசேகர், பொன்.விஜயன், ஜி.நாராயணபிரசாத், ப.ச.கமலேஷ், சே.பிரேம் ஆனந்த், தி.வை.இரவி, தங்கம் முரளி, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், நகர மன்ற தலைவர்கள் உஷாராணி ரவி, உ.வடிவேல், துணை தலைவர்கள் பரமேஸ்வரி கந்தன், எம்.பார்க்கத்துல்லாகான் உள்பட அணிகளின் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.