பதிவு:2024-02-18 22:31:29
செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் வருகிற 21-ஆம் தேதி தொழிற் பழகுநர் பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம் :
திருவள்ளூர் பிப் 17 : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப்பிரிவு ) சார்பாக தொழிற்பாகுநர் ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 21.02.2024 அன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளை சார்ந்த ஐ.டி.ஐ பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் NCVT/SCVT முறையில் கல்வி பயின்ற பயிற்சியாளர்கள், தொழிற்பள்ளிகளில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள், திறன் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள், MES பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் மற்றும் இதுநாள்வரை தொழிற்பயிற்சி முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்கள் அசல் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயனடையலாம்.
மேலும் இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9444224363, 9486939263 மற்றும் 9444139373 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தொழிற்பழகுநர் முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.