திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 24-ம் தேதி புத்தக திருவிழா : 100 க்கும் மேற்பட்ட அரங்குகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்த ஏற்பாடு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-02-23 08:38:00

திருவள்ளூர் பிப் 22 : புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுக்க மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் புத்தககண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது, திருவள்;ர்,மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் உடன் இணைந்து நடத்தப்படும் ‘திருவள்;ர் புத்தக திருவிழா-2024” எதிர்வரும் 24.02.2024 முதல் 04.03.2024ஆம் தேதி வரை 10 நாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் 1,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இக்கண்காட்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் பயன்படத்தக்க வகையில் புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் அமைய உள்ளது. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் புத்தக விலையில் 10 சதவீதம் தள்ளுபடி செய்து வழங்கப்பட உள்ளது.

இக்கண்காட்சியில் நாள்தோறும் சிந்தனையை தூண்டும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்று சிறப்புறையாற்ற உள்ளனர். மேலும் புத்தகவாசிப்பின் பயன்கள் குறித்து பள்ளி மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.