அத்திமாஞ்சேரி பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கஞ்சா, குட்கா போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு : மாவட்ட எஸ்பி பங்கேற்பு :

பதிவு:2024-02-23 08:42:41

திருவள்ளூர் பிப் 22 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கஞ்சா குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 243 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி சீனிவாசப் பெருமான் பள்ளி மாணவர்கள் இடையே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும் அவர்களுக்கு கஞ்சா, குட்கா மற்றும் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமலும் இருக்க வேண்டுமென அறிவுறுத்தி போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கூறினார்.

மேலும் கஞ்சா மற்றும் குட்கா குறித்த தகவல்களை பள்ளி விழிப்புணர்வு குழுவிடம் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்த தகவல்களை திருவள்ளூர் மாவட்ட போதை தடுப்பு எண் 9498410581 மற்றும் 6379904848 என்ற‌ எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாகவும், 10581 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறினார். மாணவர்களிடைய ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி பழகவேண்டுமெனவும் அவர்களே இந்தியாவின் வருங்கால தூண்கள் எனக்கூறி அறிவுறுத்தி மாணவ மாணவிகளிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளித்தவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளை வழங்கி எஸ்பி சீனிவாச பெருமாள் பாராட்டினார்.