பள்ளிப்பட்டு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2024-02-23 08:44:45



பள்ளிப்பட்டு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :

பள்ளிப்பட்டு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூர் பிப் 22 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்.பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட அத்திமாஞ்சேரி பேட்டை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவு , வெளி நோயாளிகள் பிரிவு, மருந்துகள் இருப்பு, சித்த மருத்துவ பிரிவு மகப்பேறு பிரிவு ஆகிய பிரிவுகளை ஆய்வு மேற்கொண்டு சுகாதார நிலையத்தினை சுத்தமாகவும் சுகாதாரமும் வைத்துக் கொள்ள வேண்டும். வரும் நோயாளிகளை கணிவுடன் பரிசோதித்து சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தொடர்ந்து கர்லம்பாக்கம் ஊராட்சி தாங்கல் காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வழங்கப்படும் உணவுகள், குழந்தைகள் எடை, உயரம் ஆகியவைகளை குறித்து ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை குழந்தைகளுக்கு வழங்கப்படும் முன் உணவினை பரிசோதிக்க வேண்டும் ஒவ்வொரு மாதமும் குழந்தைகளின் எடை மற்றும் உயரங்களை பெற்றோர்கள் முன்னிலையில் கணக்கீடு சத்தான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.பள்ளிப்பட்டு நுகர் பொருள் வாணிபக் கழக செயல்முறை சேமிப்பு கிடங்கில் உணவுப் பொருட்களின் இருப்பு பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியவைகளின் இருப்பு, தரம் குறித்து பகுப்பாய்வு மேற்கொண்டு, ஒவ்வொரு மாதமும் உணவுப் பொருட்கள் வருகையின் உணவுப் பொருட்களை எவ்வாறு பகுப்பாய்வு மேற்கொள்ள படுவதை ஆய்வு மேற்கொண்டார். பள்ளிப்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகளின் கற்றல் திறன், தேர்ச்சி விகிதம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் தளவாய்பட்டடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக கற்றல் மேற்கொண்ட கொண்ட மாணவ மாணவிகளை பாராட்டி நூல்கள் வழங்கி பின்னர் சத்துணவு சமையலறை கூடம், கழிப்பறை வசதி உட்பட பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள சேதமடைந்து பள்ளி கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் அதேப்பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொருட்களின் இருப்பு, பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும் பொழுது இன் முகத்துடன் காக்க விடாமல் உடனடியாக பொருட்கள் வழங்க வேண்டும். பள்ளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பதிவேடுகள் தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கை அவர்களின் வேலை பணி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கேட்டறிந்து பொதுமக்கள் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.

திட்டப் பணிகளுக்கு உடனடியாக கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திட்டப்பணிக்கான ஆணை வழங்கப்படும். பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவேடுகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கேட்டு அறிந்தார்.தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.மேலும் பள்ளிப்பட்டு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு.என்.ஒ.சுகபுத்ரா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க.தீபா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ஜெயக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேலாளர் கௌசல்யா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், அருள்ராஜ், வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.