அத்தங்கிகாவனூரை சேர்ந்த 72 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

பதிவு:2022-05-13 13:54:40



அத்தங்கிகாவனூரை சேர்ந்த 72 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

அத்தங்கிகாவனூரை சேர்ந்த 72 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர் மே 13 : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைப்பேர் தனியார் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தனியார் பேச்சுவார்த்தையின் மூலம் நில எடுப்பு செய்யப்பட்ட ரூ.2.16 கோடி மதிப்பீட்டிலான சுமார் 4.23 ஏக்கர் பரப்பளவு கொண்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் ஒட்டர் இன மக்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்கள் அனைவருக்கும் பட்டாக்கள் வழங்க வேண்டும், அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற ஆணைக்கேற்ப இன்றைய தினம் அத்தங்கிகாவனூர் பகுதியில் இருக்கின்ற ஆதிதிராவிட மக்களுக்கு ஏறக்குறைய ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் சுமார் 4.23 ஏக்கர் பரப்பளவு கொண்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், 72 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கி பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அந்தந்த பகுதி மக்களிடம் உள்ள குறைகளை மனுக்களாக பெற்று, அதற்கு எனது தலைமையிலான அரசு அமைந்தவுடன், பெற்றுக்கொண்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில், அதற்கென புதிய துறையை உருவாக்கி, அதற்கென தனி அதிகாரியை நியமித்து, பல்வேறு திட்டங்கள் மற்றும் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டு, சொன்னதையும், சொல்லாததையும் மக்களுக்காக நமது முதல்வர் செய்து வருகிறார்.

அதன்படி அத்தங்கிகாவனூர் பகுதியில் இருக்கின்ற 72 ஆதிதிராவிட மக்களுக்கு ஏறக்குறைய ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் சுமார் 4.23 ஏக்கர் பரப்பளவு கொண்ட இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விரைவில் 600 பட்டாக்கள் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறினார்.

இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.