திருவள்ளூரில் பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் :

பதிவு:2024-02-25 10:35:00



திருவள்ளூரில் பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் :

திருவள்ளூரில் பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் :

திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பணிகளையும் புறக்கணித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டசெயலாளர் ஜெய்கர் பிரபு கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மாநில துணைத்தலைவர் மணிகண்டன் சிறப்புரை வழங்கினார்.

அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனே ஏற்படுத்த வேண்டும்.

மக்களவை தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிறைவாக மாவட்ட பொருளாளர் முனுசாமி நன்றி கூறினார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.