பதிவு:2024-02-25 10:36:00
திருவள்ளூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் சார்பாக பள்ளி மாணவ,மாணவிகளுக்கான ஆதார் பதிவு மையங்கள் : கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள ஆர். எம். ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் சார்பாக பள்ளி மாணவ,மாணவிகளுக்கான ஆதார் பதிவு மையங்கள் (பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு) துவக்கி வைத்து பேசினார்.
தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள ஆர் எம் ஜி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான பள்ளிகளிலேயே ஆதார் விவரங்களை புதுப்பிக்கும் திட்டத்தினை ஏற்காடு நிறுவனம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
எனவே அதிக ஆதார் எண் பெறப்படாத பகுதிக்குட்பட்ட மாணவ,மாணவிகள் பயன் பெறும் வகையில் புதிய ஆதார் பதிவு மற்றும் பிழைத்திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ளப்படும் . மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ஆதார் மையங்கள் செயல்பட உள்ளது என கூடுதல் மாவட்ட ஆட்சியர்(வளர்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா தெரிவித்தார்.இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.