திருவள்ளூரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் : திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் பங்கேற்பு :

பதிவு:2024-02-25 10:38:36



திருவள்ளூரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் : திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் பங்கேற்பு :

திருவள்ளூரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் : திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் பங்கேற்பு :

திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் தலைமை தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே. கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), துரை சந்திரசேகர் (பொன்னேரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் திட்டப் பணிகள் வளர்ச்சி குறித்தும், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் குழு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் குறித்தும், சமூகநலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் சத்துணவு திட்டம் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டங்கள் குறித்தும், வருவாய் துறை சார்பில் தேசிய சமூக நலத் திட்டம் , பாரத பிரதமரின் ஒளிமயமான திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், தேசிய நில பதிவேடு நவீனமயமாக்கும் திட்டங்கள் குறித்தும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தூய்மை பாரத இயக்கம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்கள் குறித்தும், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் செயல்படுத்தப்படும் தேசிய சுகாதார திட்டம், சுகம்யா பாரத் அபியான், பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம், தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் செயல்படுத்தப்படும் தீன தயாள் உபாத்தியாய கிராம ஜோதி யோஜனா திட்டம், மறு சீரமைக்கப்பட்ட மின்மினி யோகத் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பிரதான மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டம், கனிமவளத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பிரதான மந்திரி கனிஜ் ஷேத்ரா கல்யாண் யோஜனா திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் பேரூராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம், அம்ருத் திட்டம் ஆகிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா, பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.