பதிவு:2024-02-25 10:40:11
திருவள்ளூர் 3-ஆவது புத்தகத் திருவிழா: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி துவக்கி வைத்து புத்தக அரங்கினை பார்வையிட்டார் :
திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு ஆர் காந்தி அவர்கள் 3-ஆவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி..ராஜேந்திரன்(திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),டி.ஜே.கோவிந்தராஜன் (கும்முடிப்பூண்டி) ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து புத்தக அரங்கினை பார்வையிட்டு பேசினார்.
சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் 3-ஆவது புத்தகத் திருவிழா பார்க்கும் பொழுது நான் வியந்து போய் விட்டேன்.தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற முதல் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். 10 நாட்கள் நடைபெறுகின்ற புத்தகத் திருவிழா அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டது தான் இந்த பிரம்மாண்டமான 3-ஆவது புத்தகத் திருவிழா அமைந்துள்ளது என்பதை நான் அறிவேன்.
அதேபோல் நாம் எந்த ஒரு திட்டங்கள் ஆனாலும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் தான் சிறப்பாக அமையும். 2010 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அவர்கள் சென்னையில் அண்ணா நூலகம் துவக்கி வைத்தார்கள் அவர்கள் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மதுரையில் 2023 ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமான கலைஞர் நூலகத்தினை திறந்து வைத்துள்ளார். அந்த அளவிற்கு நூலகத்தின் மீது பற்றுள்ளவர் நம் முதல்வர் தான். ஏனென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.
புத்தகங்கள் வாசிப்பது ஒரு அற்புத கலை அந்தக் கலையினை குழந்தைகள் பள்ளி பருவத்திலேயே இருந்தே புத்தகங்கள் வாசிப்பதே பழகிக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் குழந்தைகளுக்கு கற்பனை வளம் சிந்திக்கின்ற திறமை போன்ற பழக்க வழக்கங்கள் உருவாக தூண்டும் கல்வி ஒன்று தான் உங்கள் வாழ்நாளில் அழியாத செல்வம் ஆகையால் பள்ளிப் பருவங்களில் நல்ல நூல்களை வாங்கி நூல்களை வாசியுங்கள். மேலும் 10 நாட்கள் நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவினை மாணவச் செல்வங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி புத்தக அரங்குகளில் உள்ள நல்ல நூல்களை வாங்கி வாழ்வில் முன்னேறி அறிவார்ந்த திருவள்ளூர் மாவட்டமாக உருவாக்குங்கள் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இராஜ்குமார், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் (கவிதா பப்ளிகேஷன்) சேதுசொக்கலிங்கம், செயலாளர்.முருகன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்