பதிவு:2024-03-01 19:20:12
திருவள்ளூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது : 11 சவரன் நகை மீட்பு :
திருவள்ளூர் மார்ச் 01 : திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் வரதராஜன் நகர் சோழன் தெருவை சேர்ந்தவர் அமேதா டான்போஸ்கோ (59). இவர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்தான லட்சுமி (55).இவர் மாவட்ட தொழில் மையத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சந்தான லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 25-ஆம் தேதி சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.மாலை மருத்துவ சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 11 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கைரேகை நிபுணர்களின் தடயங்களை வைத்து பழைய குற்றவாளியான ஆவடி, நோரை நியூ காலனி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் விக்கி (22) என்பவனை கைது செய்து விசாரணை நடத்தியதில் இந்த திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய பொன்னேரி குன்னம்மஞ்சேரியை சேர்ந்த ரவி மகன் முத்து (27) மற்றும் , செங்குன்லம் விபிஆர் நகரைச் சேர்ந்த குமார் மகன் மதன் ஆகிய இருவர் என மொத்தம் 3 பேரை கைது செய்து அவர்களிடமருந்து 11 சவரன் நகையை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விக்கி, முத்து, மதன் ஆகிய 3 பேரையும் திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.