திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா : கேக் வெட்டி கொண்டாட்டம் :

பதிவு:2022-05-13 13:59:26



திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா : கேக் வெட்டி கொண்டாட்டம் :

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா : கேக் வெட்டி கொண்டாட்டம் :

திருவள்ளூர் மே 13 : திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.மாவட்ட செயலாளர் வி.பாரதி தலைமை தாங்கினார். விழாவிற்கு திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் (பயிற்சி) ஏ.பி.மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ஒரு நோயாளியை குணப்படுத்துவதற்கு 80 சதவிகிதம் மனநிலை,20 சதவிகிதம் மகத்துவம் செயல்படுகிறது.இவ்விரண்டையும் சரியான நிலையில் செயல்பட உதவுபவர்கள் செவிலியர்கள் தான் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் மற்றும் மாவட்ட ஆட்சியரின் மனைவி டாக்டர் கோபிகா ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று கொண்டு,கடவுளுக்கு அடுத்தபடியாக மருத்துவர் என்று சொல்லும் நேரத்தில் அந்த மருத்துவர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் செவிலியரின் பங்களிப்பு மிகவும் முக்கியம் வாய்ந்தது என செவிலியர்களின் உன்னதமான பணிகளை வெகுவாக பாராட்டி பேசினர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் மனைவி டாக்டர் கோபிகா வெள்ளை புறா ஒன்று என்ற சினிமா பாடலை பாடி மேலும் உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து செவிலியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் உமா மாவட்ட இணை செயலாளர் தீபா, மாவட்ட அமைப்பு செயலாளர் எஸ்.முத்தம்மாள்,குழந்தைகள் நல பிரிவு டாக்டர் பிரபு சங்கர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் என ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.