வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார் :

பதிவு:2024-03-01 19:22:59

திருவள்ளூர் மார்ச் 01 : திருவள்ளூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் கடந்த ஜூலை மாதம் வேடங்கிநல்லூர் பகுதியில் (ஐ.சி.எம்.ஆர். அருகில்) 5 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.33 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்த திருவள்ளூர் நகராட்சி பேருந்து நிலையம் என்பது தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை அடிப்படையிலும் கட்டுமான பணிக்காக ரூபாய் 33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்தொடங்கியது.

இதற்கானப் பணிகள் 15 மாதத்தில் நிறைவடையும் என்று அப்போதைய கலெக்டர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிய நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை இன்று காலை 11 மணியளவில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் திருவள்ளூர் நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகர மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜன், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் வி.எஸ்.நேதாஜி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.