பதிவு:2024-03-01 19:26:38
திருவள்ளூர் நகராட்சி புங்கத்தூர் லட்சுமிபுரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் மார்ச் 01 : திருவள்ளூர் நகராட்சி 13-வது வார்டில் உள்ள புங்கத்தூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ளது நகராட்சி நடுநிலைப் பள்ளி. ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 223 மா்ணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் காதுகேளாதோருக்கான சிறப்பு பிரிவில் 25 பேரும் பயின்று வருகின்றனர். தற்போது தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருவதால் தனியார், மெட்ரிக் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து மாவட்டம் முழுவதும் கூடுதல் வகுப்பறைகள் கட்டி திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி 13-வது வார்டு, புங்கத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள பள்ளியில் 2023- 24 நிதியாண்டில்.திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.15 லட்சமும், நகராட்சி கல்வி வளர்ச்சி நதிி ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் தொடக்க விழா இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகரமன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். நகரமன்ற துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர் பத்மாவதி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பளளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் வரவேற்றார். இதில் திருவள்ளூர் எம்எல்ஏ. வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியையும் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பார்வையிட்டு மாணவ மாணவிகளுக்கு பேனா, பென்சில் ஆகியவற்றையும் வழங்கினார். இதில் நகரமன்ற உறுப்பினர்கள் வி.இ.ஜான், டி.கே.பாபு, அயூப் அலி, பிரபாகரன், தனலட்சுமி, வசந்தி வேலாயுதம், நீலாவதி பன்னீர் செல்வம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் நேதாஜி, நகர அவைத்தலைவர் கமலக்கண்ணன்,. முன்னாள் நகரமன்றத் தலைவர் பொன்.பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் மோ.ரமேஷ், எஸ்.மகாலிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தா.மோதிலால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.