திருவள்ளூர் மாவட்டத்தில் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

பதிவு:2024-03-02 22:52:59

திருவள்ளூர் மார்ச் 02 : தமிழகத்தில் பருவமழை காலங்களில் மழை பொழிவு மற்றும் வானிலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்வது தொடர்பாக தமிழகம் முழுவதும் 1400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் ஆவடி வட்டத்தில் பருத்திப்பட்டு, மோரை, திருநின்றவூர், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் எளாவூர், கும்மிடிப்பூண்டி, கரடிபுத்தூர், எருக்குவாய், மாதர்பாக்கம், பொன்னேரி வட்டத்தில், ஞாயிறு, கோளூர், கூடுவாஞ்சேரி, ரெட்ஹில்ஸ், திருப்பாலைவனம், திருவெள்ளவாயில், கடப்பாக்கம், திருத்தணி வட்டத்தில், செருக்கனூர், கனகம்மாசத்திரம், மணவூர், குப்பம் மதுரா லட்சுமாபுரம், வியாசபுரம், சூரியநகரம், நல்லாட்டூர், திருவள்ளூர் வட்டத்தில், மப்பேடு, பூண்டி, வெள்ளியூர், மேல்நல்லாத்தூர், கீழானூர், ஊத்துக்கோட்டை வட்டத்தில், கன்னிகைப்பேர், பென்னாலூர்பேட்டை, எல்லாபுரம், வேளாகாபுரம், பள்ளிப்பட்டு வட்டத்தில், பள்ளிப்பட்டு, இரா.கி.பேட்டை வட்டத்தில், எரும்பி ஆகிய வருவாய் கிராமங்கள் என மொத்தம் 33 இடங்களில் தானியங்கி மழைமானிகளும்,கும்மிடிப்பூண்டி, திருத்தணி, இ.ராகி.பேட்டை, எல்லாபுரம், சோழவரம், புழல் ஆகிய 6 வட்டாரங்களில் தானியங்கி வானிலை நிலையங்களும் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.