திருவள்ளூர் மாவட்ட இணையவழி குற்றம் மூலம் ஏற்படும் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி : திருவள்ளூர் ஏடிஎஸ்பி மீனாட்சி, ஏ.எஸ்பி.,விவேகானந்தா சுக்லா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் :

பதிவு:2024-03-02 22:55:25

திருவள்ளூர் மார்ச் 02 : திருவள்ளூர் மாவட்ட இணையவழி மூலம் ஏற்படும் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே காலை 11 மணியளவில் தொடங்கிய பேரணியை திருவள்ளூர் ஏடிஎஸ்பி மீனாட்சி, ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

திருவள்ளூர் சி.வி.என்.சாலை காமராஜர் சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணியில் இணைய வழி மூலம் வேலை என்ற பெயரில் டெலிகிராம், யூடியூப், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் முதலீடு, ரேட்டிங், ரிவ்யூ போன்றவற்றை செய்தால் ரூ.100 ரூ.300 தருவதாகவும் உங்கள் வங்கிக் கணக்கில் அதிகம் பணம் இருப்பதாக டிஜிட்டல் மணி ஆக காண்பித்து நம்ப வைத்து பணம் பறிக்கும் முயற்சி செய்வதை நம்பி செலுத்த வேண்டாம் என்றும், மொபைல் போனில் தேவையற்ற லோன் ஆப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், இதனால் உங்கள் தொடர்புகள்,கேலரி விவரங்கள் எடுக்கப்பட்டு பணம் கேட்டு மிரட்டுவார்கள்.

எனவே பணம் கடன் தருவதாகவோ வேலை தருவதாகவோ கூறி அனுப்பும் குறுந்தகவல்களையோ, லிங்க்கையும் தொட வேண்டாம். அப்படி தொடுவதன் மூலம் உங்கள் வங்கி விவரங்கள் திருடப்பட்டு உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணங்கள் திருட வாய்ப்புள்ளது. இது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு, திருவள்ளூர் நகராட்சி வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், ரவிக்குமார், உள்பட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.