பதிவு:2024-03-02 23:07:13
பாடியநல்லூரில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் 526 ஊராட்சிகளில் 672 விளையாட்டு உபகரணங்கள் : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் :
பாடியநல்லூரில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் 526 ஊராட்சிகளில் 672 விளையாட்டு உபகரணங்கள் : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் : திருவள்ளூர் மார்ச் 02 : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பாடியநல்லூர் விளையாட்டு திடலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் நூற்றாண்டு பொன்விழாவை சிறப்பித்திடும் வகையில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் 526 ஊராட்சிகளில் 672 விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்விற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.அதுல்யா மிஸ்ரா,மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாதரெட்டி, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் சுதர்சனம் (மாதவரம்), சா.மு.நாசர் (ஆவடி), எ .கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),டி.ஜே கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ் சந்திரன்( திருத்தணி), துரை. சந்திரசேகர் (பொன்னேரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். . இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 கிராம ஊராட்சிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 672 கலைஞர் விளையாட்டு உபகரணங்களின் தொகுப்பை வழங்கினார். அப்போது திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பளு தூக்கும் வீரர் தனுஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக சாம்பியன் கார்த்திக் சபரிராஜ் ஆகியோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் கௌரவித்து பேசினார். திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேலோ இந்தியா போட்டியில் 38 தங்கம், 21 வெள்ளி, 30 வெண்கலம் என 98 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் தமிழகம் 2 வது இடம் பிடித்துள்ளது எனவும், விரைவில் முதலிடம் பிடிப்போம். அதேபோல் 300 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.14 கோடி ஊக்கதொகை வழங்கப்பட்டது. இந்தியாவில் விளையாட்டு துறை என்றால் தமிழ்நாடு என்ற வகையில் புதுப்புது முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளம் வயதிலேயே விளையாடியவர் கருணாநிதி எனவும், பிற்காலத்தில் ஆடுகளத்தில் விளையாடவில்லை. ஆனால் விளையாட்டு வீரருக்கு தேவையான தோல்வியில் துவளாமல் விடா, முயற்சி என அனைத்தும் அவருக்கு இருந்தது. எதிரணி எப்படி விளையாடுவார்கள் என்பதை கணித்து விளையாடுவது, யாராலும் வீழ்த்த முடியாத வீரராகவும் அவர் இருந்தார். அதனால் தான் "கலைஞர் நடஞதபந ஓஐப என பெயரிப்பட்டது. விளையாட்டில் மன திடம் இருந்தால் தான் எளிதாக வெற்றி பெற முடியும் எனவும்,யாராலும் எப்போதும் வீழ்த்த முடியாதவர் கருணாநிதி. நீண்ட தூரம் ஓடினால் தான் அதிக உயரம் தாண்ட முடியும் என்பதையும் கருணாநிதி கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.இதில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி),திட்ட அலுவலர் டாக்டர்.என்.ஓ சுகபுத்ரா,மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி உமாமகேஷ்வரி, சர்வதேச பளுதூக்கும் வீரர் தனுஷ், சர்வதேச துப்பாக்கி சுடும் வீரர் ஸ்ரீ கார்த்திக் சபரி ராஜ் மற்றும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.