திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் : தமிழ்நாடு இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் பங்கேற்று சிறப்புரை :

பதிவு:2024-03-04 12:36:50



திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் : தமிழ்நாடு இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் பங்கேற்று சிறப்புரை :

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் : தமிழ்நாடு இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் பங்கேற்று சிறப்புரை :

திருவள்ளூர் மார்ச் 04 : திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றஉம் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூர் பஜார் வீதியில் நடைபெற்றது. நகர செயலாளரும், நகரமன்றதுணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளரும், நகரமன்ற தலைவருமான உதயமலர் பாண்டியன் வரவேற்ரார். நிர்வாகிகள் தி.ஆ.கமலக்கண்ணன், டி.எம்.ரவி, எம்.பரசுராமன், ராஜேஸ்வரி கைலாசம். சம்பத்ராஜா, குப்பன், டிஎன்ஆர்.சீனிவாசன் டி.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருவள்ளூர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், திருத்தணி எம்எல்ஏ.வுமான எஸ்.சந்திரன், திருவள்ளூர் எம்எல்ஏ.,வும் தலைமைக் செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தமிழ்நாடு இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகள் குறித்து பொது மக்களிடையே பேசினார்.

அப்போது, தமிழ்நாடுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது எந்த திட்டத்தையும் அறிவிக்க கூடாது என்பதுதான் மோடியின் திட்டம். தமிழ்நாட்டை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவதே அவரது திட்டமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு 63,000 கோடி தர வேண்டும் ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்குவதை விட குறைந்த அளவே தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குகிறது. உதயநிதி ஸ்டாலின் வருகையால் தற்போது மற்ற நடிகர்களும் அரசியலுக்கு வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டு எம்எல்ஏவாகி அமைச்சர் ஆனவர். எனவே எத்தனை நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் உதயநிதி ஸ்டாலினிடம் நிற்க முடியாது.

எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள்,ஆரம்பித்தார்கள் போனார்கள் ஆனால் யாரும் நிற்கவில்லை. தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த பிரதமரை தமிழர் பண்பாட்டின்படி நமது முதலமைச்சர் வரவேற்றார். ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி அந்த தொகுதி எம்பி கனிமொழி பெயரை கூற உச்சரிக்காதது அவரது பண்பை வெளிக்காட்டுவதாக தெரிவித்தார். நடிகர் விஜயகாந்த் திமுக தலைவரை எவ்வளவு விமர்சித்து இருந்தாலும் அவரது மறைவு செய்தி கேட்டு முதல் நபராக நின்று ஆறுதல் சொன்னவர் நமது முதல்வர். அதே போல் சீமானும் கலைஞரையும் நமது முதல்வர் மு க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து இருந்தார் இருப்பினும் அவரது தந்தை மறைவிற்கு முதல் நாளாக தொலைபேசியில் ஆறுதல் சொன்னதும் நமது முதல்வர் தான் என்றார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் இது கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்தார்

இதில் நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், , ஆர்டிஇ சந்திரசேகர், நாகலிங்கம், குருதாஸ், விசிஆர்.குமரன், சி.ஜெயபாரதி, ப.சிட்டிபாபு, எஸ்.கே.ஆதாம், வி.கிஷோர், மு.சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.மகாலிங்கம், கூளூர் ராஜேந்திரன், க.அரிகிருஷ்ணன், மோ.ரமேஷ், ஜே.கிறிஸ்டி எ அன்பரசு, , உள்ளாட்சி பிரதிநிதிகள் சுஜாதா மகாலிங்கம், சரஸ்வதிரமேஷ், மகாலட்சுமி மோதிலால், சரஸ்வதி சந்திரசேகர், சிவசங்கரி உதயகுமார், விஜயகுமாரி சரவணன் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், திருவள்ளூர் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் நிர்வாகிகள் எஸ்.முனுசாமி, கே.சி.சுரேஷ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.